ஜப்பான் மன்னராக பதவியேற்ற நருஹிடோ! 10 நாட்களுக்கு பொது விடுமுறை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் நருஹிடோ இன்று பதவியேற்றார்.

உலகின் மிகவும் பழமை வாய்ந்த ஜப்பான் அரச பரம்பரையில், பதவியில் இருக்கும்போதே அகிஹிடோ தனது மன்னர் பட்டத்தை துறந்தார். வயது மூப்பு காரணமாக அவர் ஓய்வு பெறுவதாகவும், அரசு குடும்பத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் ஒருவர், பதவியில் இருக்கும்போதே பட்டத்தை துறப்பது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரச மாளிகையில், அரச பதவி துறப்பதற்கான சடங்குகள் நடைபெற்றன.

அவர், ஜப்பான் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தனது உரையின்போது கூறினார். அதன் பின்னர் அகிஹிடோவின் மகனும் பட்டத்து இளவரசருமான நருஹிடோ மன்னராக பதவியேற்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பானின் மன்னராக 59 வயதான நருஹிடோ இன்று முடிசூட்டிக் கொண்டார். டோக்கியோவின் இம்பீரியல் அரண்மனையில் 126வது ஜப்பான் மன்னராக அவர் அரச முறைப்படி பதவியேற்றார்.

ஜப்பானிற்கு புதிய மன்னர் பதவியேற்றதை முன்னிட்டு, அந்நாட்டில் 10 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்