200 ஆண்டுகளில் முதல்முறை.. அரியணையை துறக்கும் ஜப்பான் அரசர்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தனது அரியணையை துறப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஜப்பான் நாட்டின் அரசராக இருக்கும் 85 வயதான அகிஹிட்டோ, தனது வயது மூப்பு காரணமாக அரியணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பான் அரியாணையை துறக்கும் முதல் அரசர் இவர் தான்.

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அகிஹிட்டோ கூறுகையில், ‘என்னை அவர்களது அடையாளமாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஜப்பானின் வெளிச்சமிக்க எதிர்காலத்தை உருவாக்க மிகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம். அதில் நம்பிக்கைகளும், அமைதியும் நிறைந்திருக்கும்.

ஜப்பான் மக்கள் மற்றும் உலகில் உள்ள பிற நாட்டு மக்களும் அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க நான் பிரார்த்தித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அகிஹிட்டோ அரியணையை துறந்ததைத் தொடர்ந்து அவரது மகனும், இளவரசருமான நருஹிட்டோ வரும் புதன்கிழமை பதிவி ஏற்க உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்