நியூசிலாந்தில் துப்பாகிச்சூடு நடந்த பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: பொலிஸார் குவிப்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் துப்பாக்கிசூடு நடந்த கிறிஸ்ட்சர்ச் பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததை அடுத்து அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடத்தபட்ட துப்பாக்கிசூடு தாக்குதலில் 55 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலரும் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்திலிருந்து அந்நாடு தற்போது தான் மெதுவாக நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து ஏராளாமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தன.

அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 33 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்