இலங்கை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி: வெளியிட்ட அதிரவைக்கும் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பிய தம்பதி ஒன்று வெளியிட்ட தகவல் சில்லிட வைத்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலின்போது, கொழும்பில் உள்ள Cinnamon Grand ஹொட்டலில் தங்கியிருந்த அபினவ் சாரி மற்றும் அவரது மனைவி நவ்ரூப் சாரி ஆகியோரே நூலிழையில் தப்பியவர்கள்.

சம்பவத்தின்போது இருவரும் தொடர்புடைய ஹொட்டலில் காலை உணவருந்தும் ஆயத்தத்தில் இருந்துள்ளனர்.

துபாயில் குடியிருக்கும் இந்தியவம்சாவளியினரான இருவரும் தொழில் நிமித்தம் இலங்கை சென்றுள்ளனர். அங்கே தமக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அபினவ்,

இதுவரை தாம் இருமுறை மட்டுமே ஐக்கிய அமீரகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இருமுறையும் மத அடிப்படைவாத குழுக்களால் கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பை மாநகரில் மருத்துவ படிப்பில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் 12 பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவமும் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

6 நாட்கள் நீண்ட அந்த கொடூர சம்பவத்தை தாம் நேரில் பார்த்ததாக கூறும் சாரி, அதில் இருந்து மீளவே பல நாட்களானது என்றார்.

தற்போது தொழில் நிமித்தம் இலங்கையில் சென்றிருந்தபோதும் அதுபோன்ற ஒரு கொலைவெறி தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றார்.

ஈஸ்டர் நாளானதால் தாம் மனைவியுடன் இணைந்து தேவாலயம் சென்றதாகவும், ஆராதனையின் நடுவே பாதிரியார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேவாலயத்தில் இருந்தும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பாமல், வாடகை டாக்ஸி ஒன்றில் இருவரும் காலை உணவருந்த முடிவு செய்து புறப்பட்டுள்ளனர்.

ஆனால் வீதி முழுவதும் மக்கள் குழப்பவும் பதட்டமும் கலந்த நிலையில் காணப்பட்டதால், தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கே திரும்ப முடிவு செய்துள்ளனர்.

தாங்கள் தங்கியிருந்த Cinnamon Grand ஹொட்டலுக்கு திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ஹொட்டலில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் ஹொட்டலுக்கு வெளியே பீதியில் உறைந்தபடி நின்றிருந்தனர்.

சாரியும் மனைவியும் ஹொட்டலுக்கு திரும்பும் சில நிமிடங்கள் முன்னரே, தற்கொலை வெடிகுண்டுதாரியால் அந்த ஹொட்டல் தாக்கப்பட்டது.

தங்கள் கண்முன்னே என்ன நடக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை என கூறும் சாரி, அந்த தாக்குதலின் தாக்கம் இன்னமும் விட்டுவிலகவில்லை என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...