272 ஊழியர்கள் மரணம்.. 1878 பேர் பாதிப்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தோனேசிய தேர்தல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் நடந்த தேர்தலுக்கான பணியில் ஈடுபட்ட 272 ஊழியர்கள் மரணமடைந்ததும், 1,878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஒரேநாள் தேர்தல் வாக்குப்பதிவு என்று வர்ணிக்கப்படும் இந்தோனேசிய தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்டன.

260 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில், செலவுகளைக் குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், வாக்குச்சீட்டுகளை கையில் தான் எண்ண வேண்டிய நிலை இருந்தது.

REUTERS/Willy kurniawan

இதன் காரணமாக தேர்தல் பணி ஊழியர்கள் கடினமாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான வாக்குச்சீட்டுகளை கையிலேயே எண்ணி எண்ணி சோர்வடைந்தது மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு ஆளானதால் 272 ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் 1,878 ஊழியர்களின் உடல்நிலை அதீத களைப்பின் காரணமாக மோசமடைந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக 193 மில்லியன் வாக்காளர்களில் 80 சதவித வாக்குகள் பதிவானதை பெருமையாகவும், சாதனையாகவும் இந்தோனேசிய அரசு கருதியது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் எடுத்தும் இது நடந்துள்ளதாக கூறும் இந்தோனேசிய அரசு, இறந்தவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஊழியர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை பரிசீலித்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...