இரவு முழுவதும் தனது அறைக்குள் இருந்தார்: கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி குறித்து வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கொழும்பின் கிங்ஸ்பெரி ஹொட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோ காட்சியில், தற்கொலை குண்டுதாரி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஹொட்டலுக்கு வந்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் தனது அறையின் சாவியை வாங்கிகொண்டு அமைதியாக லிப்டில் தனது அறைக்கு செல்கிறார்.

இரவு முழுவதும் தனது அறையில் தங்கியிருந்துவிட்டு பின்னர் காலையில் தனது அறையை விட்டு உணவு சாப்பிடும் இடத்திற்கு சென்று தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளார்.

அவர் உணவகத்தை கடந்து செல்கையில் அங்கிருக்கும் கண்ணாடிகள் வெடித்து சிதறும் காட்சியும், ஒரு தம்பதியினர் இருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் 253க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...