இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு இரையான கொடீஸ்வரரின் பிள்ளைகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி: கதறிய உறவினர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட டென்மார்க் நாட்டில் பெரும் செல்வந்தரின் மூன்று பிள்ளைகளுக்கு பொதுமக்களும் உறவினர்களும் கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த துக்ககரமான நாட்களில் தங்களுக்கு ஆதரவும் தேற்றுதலும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் டென்மார்க்கின் பெரும் செல்வந்தரான Anders Holch Povlsen என்பவரின் நான்கு பிள்ளைகளில் மூவர் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

டென்மார்க்கின் Brande பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடையே இரங்கல் செய்தி ஒன்றை வாசித்த Anders Holch Povlsen குடும்பத்தினர்,

இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 700 பேர் கலந்துகொண்ட இந்த அஞ்சலி கூட்டத்தில் பேசிய Anders Holch Povlsen, தங்களது குடும்பத்திற்காக மட்டுமின்றி, இலங்கையில் ஈஸ்டர் நாளன்று கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் இந்த அஞ்சலி கூட்டத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்