பலரையும் பலி கொண்ட குண்டு வெடிப்பு... வெளிநாட்டில் இருக்கும் இலங்கை மக்களின் மனநிலை என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் இருக்கும் இலங்கை மக்கள் முஸ்லீம் மக்களும், கிறிஸ்துவ மக்களும் ஒன்று தான் என்று கூறியுள்ளனர்.

நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் Christchurch மசூதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஐ.எஸ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் எட்டு இடத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதலால், 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 250- பேர் பலியாகியிருப்பதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறந்தவர்களின் உண்மையான விவரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த தாக்குதல் குறித்து நியூசிலாந்தில் இருக்கும் இலங்கை மக்களிடம் பிரபல ஆங்கில ஊடகம் பேட்டி அளிக்கையில், அடுத்தடுத்து இரண்டு அழகான நாடுகளில் நடந்த தாக்குதல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் பிறந்து வளர்ந்த நாடு இப்போது மிகப் பெரிய துயரத்தில் இருக்கிறது. இதை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை, நாங்கள் இப்போது அங்கில்லை, ஆனால் எப்போது எங்கள் நாட்டு மக்களை மறக்கமட்டோம் என்று கூறிய அவர்கள், முஸ்லீம் மக்களும், கிறிஸ்துவ மக்களும் பாகுபாடில்லாத ஓரினமே என்று கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்