உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்.. வெற்றிகரமாக முடிந்த பரிசோதனை!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷிய நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின் உற்பத்தி செய்து பரிசோதனை செய்யப்பட்டது.

ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன் என்ற ரஷியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கியுள்ளது. அந்நிறுவனம் பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போன்று காட்சியளிக்கும் அணுமின் நிலையத்தை வடிவமைத்தது.

இந்நிலையில், அந்த அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றிருப்பதை, ரொஸாட்டம் குழுவினரின் மிகப்பெரிய சாதனை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், அணுமின் நிலைய அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, மின் திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.

தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் தொலைதூரத்தில் உள்ள பின் தங்கிய பகுதிகளுக்கு மின்சார வழங்குவதற்கு இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers