இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த வங்கதேச பிரதமரின் பேரன்... விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த வங்கதேசத பிரதமரின் பேரன் உடல் சொந்த நாட்டிற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் வெளிநாட்டைச் சேர்ந்த 48- பேர் பலியாகியுள்ளனர். இதில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைப் பற்றிய எந்த ஒரு விபரமும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த Zayan Chowdhury என்ற 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

விடுமுறைக்காக தந்தையுடன் இலங்கை வந்திருந்த போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதில் அவரின் தந்தை Mashiul Haque Chowdhury-க்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்போது சிறுவனின் உடல் வங்கதேசத்திற்கு SriLankan Airlines மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சரியாக உள்ளூர் நேரப்படி பகல் 12.40 மணிக்கு விமானம் டாக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.

இறந்த சிறுவன் வங்கதேச பிரதமர் Sheikh Hasina-வின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்