இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததா? நியூசிலாந்து பிரதமர் பதில்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா என்பது குறித்த கேள்விக்கு அந்நாட்டின் பிரதமர் பதில் கூறியுள்ளார்.

இலங்கையில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் நடந்த வெடி குண்டு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதல் நடந்து சில தினங்களுக்கு பின்னரே ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதன் பின்னணியில் என்ன இருக்கும் என்ற போது, அவர்கள் ஒரு நீண்ட தூர தாக்குதலை நிறைவேற்ற காத்திருந்ததாகவும், அது நிறைவடைந்த பின்னரே அவர்கள் அறித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமின்றி நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐ.எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவதாக ஏற்கனவே இந்திய உளவுத்துறை எச்சரித்த நிலையில், அதை அரசு சாதரணமாக எடுத்துக் கொண்டதன் விளைவாகவே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers