27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த தாய் ஒருவர், மகனை காப்பற்ற முயன்றபோது விபத்தில் சிக்கியதால், 27 வருடங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து விழித்து பேச ஆரம்பித்திருக்கிறார்.

ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா என்கிற தாய், கடந்த 1991ம் ஆண்டு கார் ஒன்றில் தன்னுடைய 4 வயது மகன் ஒமர் உடன் பயணித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது வேகமாக வந்த பள்ளி பேருந்து ஒன்று அவர்களின் கார் மீது பலமாக மோதியிருக்கிறது. இதில் மகனை தன்னுடைய கைகளில் அணைத்தபடி காப்பற்றிவிட்டு விபத்தில் சிக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த முனிரா கோமா நிலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய வயது 32. காப்பீட்டு தொகை காரணமாக அவரை பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அவர் இனிமேல் ஒருபோதும் மீண்டும் வர மாட்டார் என மருத்துவர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர்.

1991ம் ஆண்டு முனிரா, ஜேர்மனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருடைய கை மற்றும் கால் தசைகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருடைய உடல்நலனை மேம்படுத்த மருந்துகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன.

பின்னர் ஒருவருடம் கழித்து ஒரு நாள், தன்னுடைய அம்மாவை சரிவர பார்த்துக்கொள்வதில்லை என ஒமர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அடுத்த மூன்று நாட்கள் கழித்து 'ஒமர்' என யாரோ ஒருவர் கூப்பிடுவதை போல குரல் ஒலித்திருக்கிறது. அந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது ஓமருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அவனுடைய அம்மாவிற்கு வேறு எதுவும் பேச தெரியவில்லை. மகனுடைய பெயர் மட்டும் கூறி அழைத்துள்ளார்.

கடந்த மாதம் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், முனிரா தற்போது பேச ஆரம்பித்துவிட்டார் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருக்கும் ஒமர், தன்னுடைய தாய் பேச ஆரம்பித்திருப்பது, வானத்தில் பறப்பதை போன்ற மகிழ்ச்சியை தனக்கு தருவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers