உலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மணமகள் ஒருவர் வெளியிட்டுள்ள மாதவிடாய் கறை திருமண ஆடையினை இணையதளவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை பொதுமக்களிடம் பரப்பி வந்தாலும் கூட, அதைப்பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணப்பெண்ணின் ஆடை ஒன்றானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் வெண்ணிற திருமண கவுனின் கீழ் பகுதியில் சிகப்பு நிற டை அடிக்கப்பட்டிருக்கும் ஆடை ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

அந்த ஆடையின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டதிலிருந்தே வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த இணையதளவாசிகள் கடுமையாக மணமகளை விமர்சனம் செய்து வருகின்றனர். திருமண நாளில் மாதவிடாய் நிகழ்வு வரவிருக்கும் என்பதால் அந்த மணப்பெண் இப்படி ஒரு நிறத்திலான ஆடையினை வடிவமைக்க கொடுத்திருப்பதாக சிலர் அருவருக்கத்தக்க கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சில பேர் இந்த ஆடைக்கு அவர்களாகவே (period stain tampon bridal dress) 'மாதவிடாய் கறை திருமண ஆடை' என்று பெயரிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதில் ஒருவர் மட்டும் இந்த ஆடை 'உண்மையில் மிகவும் பிடித்திருக்கிறது' என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்