எனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ் வெளியிட்ட திக் திக் நிமிடங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் பறக்கும் விமானத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த 2 மாத பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின்போது உடனிருந்த அவுஸ்திரேலிய நர்ஸ் ஒருவர் குறித்த சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து புதிய வாழ்க்கையை துவங்கும் நோக்கில் சவுதி அரேபிய குடும்பம் ஒன்று மலேசியா வழியாக அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

மொத்தம் ஐந்தரை மணி நேர பயணத்தினிடையே இந்த சோகச்சம்பவம் நடந்துள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தை ஒருவித தவிப்பில் இருந்துள்ளது. மட்டுமின்றி எந்த தொல்லையும் இன்றியே அழவும் துவங்கியுள்ளது.

அதன் பெற்றோரால் குறித்த குழந்தையை ஆசுவாஸப்படுத்த முடியாமல் போனது. இந்த நிலையிலேயே, குறித்த விமானத்தில் பயணம் செய்திருந்த அவுஸ்திரேலிய செவிலியர் நாதியா பரேன்ஸீ உதவ முன்வந்ததாக கூறியுள்ளார்.

குழந்தையை செவிலியர் நாதியா தமது கைகளில் அள்ளி எடுக்கும்போது, அதன் உடலின் வண்ணம் மாறியிருந்ததாக கூறும் அவர்,

குழந்தையும் மூச்சுவிட அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் இருந்தே, குழந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதை தாம் உணர்ந்துகொண்டதாக நாதியா குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக மருத்துவரை அழைத்த நாதியா, குழந்தையை காப்பாற்ற கோரியுள்ளார். அப்போது விமானத்தில் இருந்த நான்கு மருத்துவர்கள், பெர்த் நகரத்தில் விமானம் தரையிறங்கும் வரை சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் விமானத்தில் வைத்தே செவிலியர் நாதியாவின் கைகளில் கிடந்தபடியே குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.

முன்னதாக விமானியின் கோரிக்கையை ஏற்று மருத்துவர் குழு ஒன்று தயார் நிலையில் இருந்துள்ளது.

தொடர்ந்து, குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், குழந்தை உயிர் இழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers