இலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 321 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பு நிறுவமான Amaq propaganda agency மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பான எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

மேலும் அமெரிக்க கூட்டணி நாடுகளின் குடிமக்கள் மற்றும் கிறிஸ்துவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்