வரலாற்றில் முதல் முறையாக ரஷிய ஜனாதிபதி புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் ரஷிய ஜனாதிபதி புதின் இருவரும் வரலாற்றில் முதல் முறையாக வரும் 25ஆம் திகதி சந்திக்க உள்ளனர்.

வடகொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சர்வதேச நாடுகள் வடகொரியாவின் சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்தித்த பிறகு இந்த சூழல் மாறியது. அதாவது வடகொரிய தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி அமைதிக்கு திரும்பியது.

ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிகழ்ந்த கிம்-டிரம்ப் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ரஷிய ஜனாதிபதி புதின் வரலாற்றில் முதல் முறையாக கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு விளாடிவோஸ்டோக் நகரில் வருகிற 25ஆம் திகதி நடக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, ரஷியாவுடனான நட்பை புதுப்பிக்கும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Alexei Nikolsky

Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்