அதிகாலையில் வந்த தொலைபேசி அழைப்பு... வெளிநாட்டில் அதிர்ந்த இலங்கை பெண்மணி: கொத்தாக பறிகொடுத்ததாக கண்ணீர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் குடியிருப்பு ஒன்றில் பணியாற்றிவரும் இலங்கை பெண்மணியின் 4 நெருங்கிய உறவினர்கள் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

துபாயில் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய குடும்பம் ஒன்றிற்கு உதவியாளராக இருந்து வருகிறார் இலங்கையின் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த Annshiroma Senani Ranasingha.

39 வயதான இவர் ஈஸ்டர் பண்டங்களை சமைக்கும் பொருட்டு மிகுந்த பரபரப்பில் அப்போது இருந்துள்ளார்.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி அதிகாலையில் இலங்கையில் உள்ள தமது 13 வயது மகள் சாஷா தொலைபேசியில் அழைத்து, அந்த கொடூர தகவலை பகிர்ந்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில், நெருங்கிய உறவினர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சாஷா கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

Annshiroma உறவினர் துஷாரா, அவரது மனைவி சந்திரா, 10 வயது மகள் ஷைனி மற்றும் 6 வயது மகள் சதிபா ஆகியோர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி உறவினர்களான Gerty Weerasinghe மற்றும் Freida ஆகியோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஈஸ்டர் தினத்தன்று நீர்கொழும்பு பகுதியில் உள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்துள்ளனர்.

இச்சம்பவம் அறிந்த பின்னர் இதுவரை தமக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என கூறும் Annshiroma, பல நண்பர்களின் நிலை என்னவானது என தெரியாமல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட நீர்கொழும்பு பகுதியானது அச்சுறுத்தலுக்கு உள்ளானதில்லை என கூறும் Annshiroma,

தற்போது ஈஸ்டர் தின தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் இருந்து எப்படி மீண்டுவரப் போகிறேன் என தெரியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்