இலங்கை குண்டுவெடிப்பில் பரிதாபமாக பலியான வங்கதேச பிரதமரின் 8 வயது பேரன்: வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் இலங்கை குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினரும் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் மகள், மருமகன், பேரன்கள் இருவர் என நான்கு பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் குண்டு வெடித்த சமயத்தில் அங்கு வங்கதேச பிரதமரின் உறவினர்கள் தங்கியிருந்தனர்.

இதில் சலீம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி, மற்றும் ஒரு மகன் காயமின்றி தப்பித்தனர்

இந்நிலையில் தனது இன்னொரு மகன் ஜயானை (8) காணவில்லை என அவர் கூறிவந்த நிலையில் இலங்கை அரசு வங்கதேச பிரதமரின் பேரனும், சலீமின் மகனுமான ஜயான் தீவிரவாத குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜயானின் உடல் இன்று வங்கதேசம் எடுத்ததுச் செல்லப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers