பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் உயிரிழப்பு... 100க்கும் மேற்பட்டோர் காயம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் லூசான் தீவில் நேற்று பிற்பகல் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதில் அப்பகுதியிலுள்ள விமான நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, குறைந்தது இரண்டு கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டடங்களின் இடிபாடுகளில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Pampanga மாகாணத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அங்கு தான் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

கடைசியாக கடந்த 2013-ல் பிலிப்பைன்ஸில் பெரிய அளவிலான நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் பதிவானது.

இதில் 220க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Eastern Samar மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்