ஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞர்.. ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் ஒருவர், ஹிஜாப்பை கழற்றியதற்காக ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.

ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஈரானில் நடந்த ஹிஜாப் கட்டாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், விதா முவாஹெத் என்ற பெண் வழக்கறிஞர் ஈடுபட்டார்.

அப்போது அவர் தான் தலையில் கட்டியிருந்த ஹிஜாப்பை கழட்டினார். இதன் காரணமாக அவருக்கு தற்போது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் 5 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்திருப்பதால், விதா முவாஹெத்திற்கு ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‘நீதிபதி விதாவுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளதை உணர்ந்திருக்கிறார். மேலும் அவரது செயலில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers