82 அடி உயரத்தில் இருந்து பிஞ்சு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாயார்: அதிர்ச்சி தரும் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தெற்கு உக்ரைன் நாட்டில் மது போதையில் இருந்த தாயார் ஒருவர் தமது 9 மாத குழந்தையை 82 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு உக்ரைனின் மைக்கோலீவ் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் கடும் குளிர் தண்ணீரில் விழுந்த அந்த குழந்தை, சுமார் 15 நிமிடங்கள் முகம் குப்புற தண்ணீரில் மிதந்ததுடன், பின்னர் கோமாவில் சென்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குறித்த கொடூர தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான ஐரினா ஷின்கருக் என்பவரே தமது 9 மாத பிள்ளையை கொலை செய்யும் நோக்கில் தூக்கி வீசியவர்.

சம்பவத்தன்று குழந்தை பாவ்லிக்கை ஒரு கையில் ஏந்திக்கொண்டும் மறு கையில் மது போத்தலுடனும் குறிப்பிட்ட பாலம் வழியாக நடந்து சென்றுள்ளார்.

திடீரென்று பாலத்தின் நடுவே நின்றுகொண்டு குழந்தை பாவ்லிக்கை தூக்கி வீசியுள்ளார். பின்னர் காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார்.

ஐரினாவின் அலறல் கேட்டு அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் சிலர் உதவிக்கு ஓடிச்சென்றதுடன் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே படகு ஒன்றில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டுள்ளனர்.

அப்போது குழந்தை கோமா நிலையில் இருந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சுமார் ஒருவார காலம் உயிருக்கு போராடிய குழந்தையை கடுமையாக போராடி மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

இதனிடையே, குழந்தையின் தாயார் ஐரினாவை கைது செய்த பொலிசார், கொலை முயற்சிக்கு வழக்குப் பதிந்தனர்.

ஓராண்டு கால விசாரணைக்கு பின்னர், அந்த கொடூர தாயாருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து பிராந்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி பெற்றோருக்கான உரிமையையும் நீதிமன்றம் பறித்துள்ளது. குழந்தை பாவ்லிக்கை தற்போது, அதன் தந்தையின் சகோதரி ஒருவர் தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின்போது, வறுமை காரணமாகவே தாம் குழந்தையை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் வறுமையில் தத்தளிப்பவர்களுக்கான அரசு உதவித்தொகையை தவறாமல் பெற்று வருவதாகவும், அந்த தொகையில் மது அருந்துவதாகவும், அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்