சிங்கத்தை செல்லமாக வருடி விளையாடிய நபர்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் சிங்கம் ஒன்றை செல்லமாக கொஞ்சி விளையாடிய நபரின் கையை கடித்துக் குதறி பதம் பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டவரான 55 வயது பீற்றர் நார்டே என்பவரையே சிங்கம் கடித்துக் குதறியுள்ளது.

சம்பவத்தன்று தமது 10-வது திருமண நாளை கொண்டாடும் பொருட்டு பீற்றர் தமது மனைவியுடன் Tikwe River Lodge என்ற வனவிலங்கு பூங்காவிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிங்கம் ஒன்றை தனியாக பார்த்த பீற்றர், அந்த சிங்கத்தை செல்லமாக அருகாமையில் அழைத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் செல்லமாக கொஞ்சியுள்ளார். திடீரென்று அந்த சிங்கமானது பீற்றரின் கை ஒன்றை கவ்வியது, மட்டுமின்றி கடித்துக் குதறவும் செய்துள்ளது.

அருகாமையில் இருந்த பெண் ஒருவர், இதைப் பார்த்து அலறியுள்ளார். ஆனாலும் அந்த சிங்கமானது பீற்றரை இழுத்துக் கொண்டு அதன் கூண்டு அருகாமையில் சென்றுள்ளது.

இதனிடையே சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து பீற்றரை மீட்டுள்ளனர். சிங்கத்திடம் இருந்து மீட்டாலும், பீற்றரின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப்பயணிகள் வனவிலங்கு பூங்காக்களில் சிங்கங்களிடம் சிக்குவது இது முதன்முறை அல்ல.

குட்டியாக இருக்கும்போதே சிங்கம் ஒன்றை வளர்த்து பராமரித்து வந்த பிரித்தானிய வனவிலங்கு பூங்கா நிறுவனர் ஒருவர், அந்த சிங்கத்தாலையே கடந்த மே மாதம் கடுமையாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்