பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற மூவர் கும்பல்... கத்திமுனையில் நடந்த கொடூரம்: வெளியான சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தஸ்மேனியா நாட்டின் பர்னி நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பாடசாலை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கி கைவிட்டு சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பர்னி நகரில் குடியிருந்த லியா என்ற 16 வயது பாடசாலை மாணவி சம்பவத்தன்று தமது நண்பர்களின் அழைப்பை ஏற்று கிறிஸ்துமஸ் இரவு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார்.

குட்டி வாகனம் ஒன்றில் ஏறிய இவரைத்தவிர, அந்த வாகனத்தில் இவருக்கு அறிமுகமான கிளென் என்பவருடன் மேலும் மூவர் அந்த வாகனத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் லியா செல்லவேண்டிய பகுதி வந்ததும், அந்த வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது.

கலவரமடைந்த லியா வாய்விட்டு அலறியுள்ளார். ஆனால் அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

லியாவின் நண்பர் கிளென், அவர்களிடம் வாதிட்டுள்ளார். ஆனால் அந்த கும்பல் வாகனத்தை நிறுத்தி அவரை கடுமையாக தாக்கியுள்ளது.

மட்டுமின்றி வாகனத்தில் இருந்து லியாவை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டுவந்து, கத்திமுனையில் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளனர்.

மேலும், உன் கல்லறையை நீயே தோண்டிவிடு எனவும் எச்சரித்துள்ளனர். இதனிடையே, லியாவை அழைத்துக் கொண்டு அந்த மூவர் கும்பல் வாகனத்தை அதிக வேகத்தில் செலுத்தி மோதவிட்டுள்ளது.

இதில் நினைவை இழந்த லியா, பின்னர் ஒருவழியாக அந்த வாகனத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஆனால் இந்த வழக்கு 1994 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையில் வந்தபோது, லியா பொய் சொலவதாகவும், போதை மருந்துக்கு அடிமையானவர் எனவும் பல பொய்க்குற்றச்சாட்டுகள் நிரத்தியுள்ளனர்,

தொடர்ந்து நான்கு வார கால விசாரணையின் முடிவில் மூவருக்கும் மொத்தமாக 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் முக்கிய குற்றவாளியான ஹேவுட் தமது 51-வது வயதில் மரணமடைந்த நிலையில், 41 வயதாகும் லியா தமக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்