மகளுடன் சேர்த்துவையுங்கள்! விசா பிரச்சனையால் இலங்கையில் இருந்து இந்தியா வந்த போலந்து பெண் திருப்பி அனுப்பட்டார்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து பெண் விசா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டை சேர்ந்த Marta Kotlarska என்ற 42 வயதான பெண்மணி புகைப்படக்கலைஞர ஆவார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் கோவாவுக்கு வந்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு முறை இலங்கையில் இருந்து பெங்களூரின் வழியாக இந்தியாவுக்கு பொருளாதார விசா மூலமாக இரண்டு முறை பயணம் செய்துள்ளார்.

இவரது மகள் கோவாவில் பயின்று வருகிறார். முதலில் கோவா வந்த இவர் மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் மார்ச் 24 ஆம் திகதி இலங்கையில் இருந்து பெங்களூர் வந்த இவரை, விமான நிலைய அதிகாரிகள் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்துள்ளார் என கூறி மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் 180 நாட்கள் சட்டவிரோதமாக இருந்ததாகவும், முறையாக விசாவை புதுப்பிக்காமல் விதிமுறைகளை மீறியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாய்லாந்தில் இருக்கும் இவர், இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியை நாடியுள்ளார். எனது மகள் கடந்த ஒருவாரமாக என்னை விட்டு பிரிந்து தனியாக இருக்கிறார். இந்தியாவில் நுழைவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனது 11 வயது மகளுடன் நான் மீண்டும் இணைவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், எனது ஒரே நம்பிக்கை நீங்கள் தான் என டுவிட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்