ஹோட்டல் அறையில் கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி: 15 மில்லியன்பேர் பார்த்த வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஹோட்டல் அறை ஒன்றில் காதலியுடன் படுக்கையில் இருக்கும் கணவனை கையும் களவுமாக மனைவி பிடிக்கும் வீடியோ ஒன்று சீனாவில் வைரலாகி வருகிறது.

சுமார் 15 மில்லியன்பேர் அந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளார்கள்.

சீனாவில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு கணவனை, தனது நண்பர்கள் உதவியுடன் ஒரு பெண் பிடித்திருக்கிறார்.

முன்னெச்சரிக்கையாக தனது நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு செல்லும் மனைவி, இரவு உடையில் இருக்கும் அந்த பெண்ணுடன் தனது கணவர் படுக்கையில் இருப்பதைக் காண்கிறார்.

அவரது நண்பர்கள் நடந்தவற்றை விடியோவாக பதிவு செய்துள்ளனர்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், அந்த பெண், ஆறு வருட திருமண வாழ்க்கையின் நான் உனக்கு என்ன குறை வைத்தேன் என்று கேட்டு கணவனை கன்னத்தில் அறைகிறார்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் நண்பர்களில் ஒருவர், இன்று வரை நீ உன் மனைவியின் பணத்தில்தானே சாப்பிடுகிறாய் என்று கேட்க, அந்த நண்பரை அடிக்கப் பாய்கிறார் அந்த கணவன்.

அறையின் மூலையில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிடுகிறார்கள்.

பின்னர் அந்தப் பெண் கணவனின் காதலியின் கையைப் பிடித்து இழுக்க, அவளோ, நாம் அமைதியாக பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்று கெஞ்சுகிறார்.

திருமணமான ஒருவரின் வாழ்க்கையைக் கெடுக்கிறாயே என்று அந்த பெண்ணிடம் கேட்டால், அவருக்கு திருமணமானது தனக்கு தெரியாது என்றும், திருமணம் ஆகாதவர் என்று எண்ணியதாலேயே அவரைக் காதலித்ததாகவும் அந்த பெண் கூறுகிறார்.

அதற்கு, இப்போதுதான் உண்மை தெரிந்து விட்டதே, இனி என்ன செய்யப்போகிறாய் என ஒருவர் கத்த, என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப்பேந்த விழிக்கிறார் அந்தப் பெண்.

இதுபோன்ற தவறான உறவுகளால் சீனாவில் பல தம்பதிகள் நீதிமன்றத்தை நாடுவது அதிகரித்து வரும் நிலையில், சென்ற மாதம் கையும் களவுமாக பிடிபட்ட ஒரு ஜோடியை, பொதுமக்கள் நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவமும் நடைபெற்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்