விளையாட்டாக எழுதிய ஓன்லைன் தேர்வு: ஆசிய மாணவனுக்கு கூகுள் தந்த இன்ப அதிர்ச்சி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த அப்துலா கான், ஸ்ரீஎல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் பி.இ- கம்யூட்டர் சைன்ஸ் படித்து வருகிறார்.

முதலில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, தோல்வி அடைந்ததால் இந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

வீட்டில் இருக்கும்போது இணையத்தில் புரோகிராமிங் தொடர்பாக படித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை கூகுள் நடத்திய ஓன்லைன் புரோகிராமிங் தேர்வில் விளையாட்டாகப் பங்கேற்றுள்ளார்.

சில தினங்களில் அவருக்குக் கூகுள் நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்துள்ளது.

அப்துலாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. நேர்காணல் லண்டனில் இருக்கும் கூகுள் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் பணிக்கு சேருமாறு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு சம்பளமாக இந்திய மதிப்பில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாத அப்துலா இன்று லண்டனில் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறார்.

படித்துக்கொண்டிருக்கும்போதே கூகுளில் வேலைக்குச் சேரும் இரண்டாவது மாணவர் இவர். கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த சினேகா என்னும் மாணவி, 1.2 கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்