பின்னழகை பெரிதாக்க அழகி பட்டம் வென்ற இளம் பெண் செய்த செயல்.... நேர்ந்த விபரீதம்... எச்சரிக்கை தரும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அழகு ராணி பட்டம் வென்ற இளம் பெண் தனது பின்னழகை பெரிதாக்க ஆப்ரேஷன் செய்த நிலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் நைனிகா மிரியம். அழகு ராணி பட்டம் வென்றவரான இவர் இந்தாண்டு நடைபெறும் அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இதற்காக தனது இடுப்புப்பகுதியில் உள்ள கொழுப்புகளை கொண்டு பின்னழகை பெரிதாக்க முடிவு செய்து அது தொடர்பான ஆப்ரேஷனை கடந்த டிசம்பர் மாதம் செய்து கொண்டார்.

ஆனால் ஆப்ரேஷன் தோல்வியடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி கோமா நிலைக்கு சென்றார் மரியம்.

இந்நிலையில் தற்போது மரியம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் நுரையீரலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரியமின் மறைவுக்கு நாட்டின் முன்னாள் அமைச்சர் பெமி கயோட் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இது போன்ற ஆப்ரேஷன்களை செய்ய நினைப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்