சாலையில் திடீரென குண்டுவெடிப்பு...ஆங்காங்கே கிடந்த சடலங்கள்... கதறி அழும் மக்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சோமாலியாவின் தலைநகர் Mogadishu-ல் உள்ள பிரபல ஹொட்டலின் வாசலில் காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும், நேரில் பார்த்த சிலரும் கூறுகையில், ஒரு வாகனம் முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு, நகரின் முக்கிய இடத்தில் வெடிக்க செய்துள்ளனர்.

குண்டு வெடித்த பின்னர் அருகிலிருந்த கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின.

சாலையில் எங்கு பார்த்தாலும் படுத்த நிலையில் மக்கள் இருக்கிறார்கள், இவர்களில் பலர் சடலங்களாக கிடந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் தங்களின் உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என மக்கள் கதறி அழுதபடி தேடினார்கள்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்றக்கவில்லை.

ஆனால் Mogadishu நகரில் Al-Shabaab தீவிரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது என்பது முக்கிய விடயமாகும்.

நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்த குண்டு வெடிப்பில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்