பிறந்த நாளை கொண்டாட பாராசூட்டில் குதித்த இளம்பெண்ணின் பரிதாப முடிவு: விபத்தா, சதியா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது 18ஆவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக பாராசூட்டில் குதித்த ஒரு இளம்பெண்ணும் அவரது பயிற்சியாளரும் அவர்களது பாராசூட் சரியாக விரியாததால் தரையில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் தனது பிறந்த நாளை சாகஸ நிகழ்ச்சி ஒன்றைச் செய்து கொண்டாட விரும்பிய Vanessa Ivonne Melendez Cardenas, 1,300 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதிக்க முடிவு செய்தார்.

பார்வையாளர் ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், Vanessaவும், அவரது பயிற்சியாளரான Mauricio Gutiérrez Castillo (34)ம் வானத்திலிருந்து வேகமாக தரையை நோக்கி விழும் அதிர்ச்சிக் காட்சியைக் காண முடிகின்றது.

தரையில் மோதி அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், அருகிலுள்ள புல்வெளி ஒன்றில் அவர்கள் உடல்களை பொலிசார் கண்டெடுத்தனர்.

இதற்கிடையில், அவர்கள் பாராசூட்டில் பறப்பதற்கு உதவிய The Mexican skydiving company என்னும் நிறுவனம், Vanessaவும் Castilloவும் உயிரிழந்ததற்கு காரணம் விபத்து அல்ல என தெரிவித்துள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவரான Jorge Gaitán, உயிரிழந்த இருவரில் ஒருவர்தான் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

அது பாராசூட் விரியாததால் ஏற்பட்ட தவறு அல்ல, அதில் பறந்த இருவரில் ஒருவர் வேண்டுமென்றே ஏதோ குளறுபடி செய்ததால்தான் இந்த அசம்பாவிதம் நேரிட்டிருக்கிறது என்கிறார் அவர்.

அது விபத்து அல்ல, அது மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது, அதை நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறும் Jorge Gaitán, உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை எங்களுக்கு தெரிய வரவில்லை என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்