வெளிநாட்டில் கர்ப்பிணி காதலியை எட்டி உதைத்த இந்தியர்... கட்டை உடையும் வரை அடித்த கொடூரம்....வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில், கர்ப்பமாக இருந்த காதலியை அடித்து கொடுமைப்படுத்திய வழக்கிலும், சாலையில் நபர் ஒருவரை அடித்த வழக்கிலும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் முகமது முஸ்தபா அலி (24) என்ற இளைஞர் ஷாயிகா நடியா ஹெர்மன் (21) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த 2017 ஜூன் 11ஆம் திகதி சமயத்தில் நடியா 4 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார்.

இந்த சமயத்தில் நடியாவின் உறவினர் வீட்டில் முஸ்தபாவும், நடியாவும் இருந்தனர்.

அப்போது நடியாவின் முன்னாள் காதலன் குறித்து அவருக்கும், முஸ்தபாவுக்கும் சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து கர்ப்பிணி என்றும் பாராமல் நடியா முகத்தில் 3 முறை அடித்த முஸ்தபா, அவர் தொடையில் இருமுறை எட்டி உதைத்தார்.

பின்னர் படுக்கையில் உட்கார்ந்திருந்த நடியாவை அப்படியே கீழ் நோக்கி இழுத்ததில் நடியா கீழே விழுந்தார்.

இதன்பின்னர் நடியாவின் கால்களை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு வீட்டின் வெளியில் கொண்டு நிறுத்தினார் முஸ்தபா.

இதையடுத்து உறவினர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மறுத்த நடியா, முஸ்தபாவால் தான் காயம் ஏற்பட்டதாக கூறினார்.

இதன்பின்னர் நடியாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த டிசம்பரில் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டார்,

கடந்த மார்ச் மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில், இரவு 9 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த முஸ்தபா முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது அதிகளவு ஒளியை தரும் விளக்கை செலுத்தினார்.

இது தொடர்பாக அந்த காரில் இருந்த வெய் கியோங் (49) என்பவருடன் முஸ்தபாவுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அவர் முகத்தில் கியோங் குத்தினார்.

பின்னர் காரிலிருந்த மரகட்டையை எடுத்து அது உடையும் வரை கியோங்கை பயங்கரமாக தாக்கியுள்ளார் முஸ்தபா.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக முஸ்தபா மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் முஸ்தபா கூறுகையில், எனக்கு ஏற்பட்ட விவாகரத்து காரணமாக மன அழுத்தத்தில் இருந்தேன், அந்த கோபத்தின் காரணமாகவே இப்படி செய்தேன் என கூறினார்.

அவரின் வாதத்தை ஏற்காத நீதிபதி, முஸ்தபாவுக்கு இரண்டு குற்றங்களுக்கும் சேர்த்து 10 வார சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

முஸ்தபாவை தாக்கிய கியோங் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும், கர்ப்பிணியாக இருந்த போது நடியாவை படுக்கையில் இருந்து கீழே தள்ளிவிட்ட குற்றம் தொடர்பாக அவருக்கு தனியாக தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers