இரண்டு கருப்பைகள்: முதல் குழந்தை பிறந்த 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்ற அதிசய பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வங்கதேச நாட்டில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

Shyamlagachhi என்ற கிராமத்தை சேர்ந்த Arifa Sultana என்ற பெண்மணிக்கு பிப்ரவரி 25 ஆம் திகதி Khulna மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

குறைமாத நிலையில் பிறந்த குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 26 நாட்கள் கழித்து Arifaக்கு உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் Sheila Poddar கூறியதாவது, இரண்டு கருப்பைகள் இருந்துள்ளன.

அல்ட்ராசோனோகிராஃபி பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் குழந்தை ஒரு கருப்பையிலிருந்து பிறந்தது. அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் பிற கருப்பையிலிருந்தே பிறந்துள்ளன.

"இது ஒரு அரிய சம்பவம். நான் முதன் முறையாக இப்படி ஒரு நிகழ்வை பார்த்துள்ளேன். இதுபோன்ற சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்