சொந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஆண்கள்: அகதிகளின் உண்மை நிலை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐரோப்பாவுக்கு சென்றால் நன்றாக இருக்கலாம் என்ற ஆசையில் புறப்படும் அகதிகள், கடத்தல்காரர்கள் கையில் சிக்கி அனுபவிக்கும் கோரங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக, லிபியாவில் அகதிகள் தங்கள் கடல் பயணம் முடியும் வரை சித்திரவதைகளும் பாலியல் கொடுமைகளும் அனுபவிப்பதாக ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பெண்கள் எப்படி துஷ்பிரயோகம் செயப்படுகிறார்களோ அதே அளவில் ஆண்களும் சித்திரவதை செய்யப்படும் செய்திகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்கின்றன.

அகதிகளை கப்பலில் வைத்து சித்திரவதை செய்யும் கடத்தல்காரர்கள், அதை படம் பிடித்து ஸ்கைப் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் விடயங்களும் நடப்பதாக Women's Refugee Commission என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு மன நல நிபுணர் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஆண்களால் நிறைந்த கல்லறைகளைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் அகதிகள், வன்புணர்வு, கூட்டமாக பாலியல் துஷ்பிரயோகம், பாலுறுப்பு அறுக்கப்படுதல், ஆடைகள் அகற்றப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுதல், அல்லது தங்கள் சொந்த சகோதரிகளையே வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தப்படுதல் என மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தப்படுவதோடு, பாலுறுப்புகள் அறுக்கப்படுதல், இறக்கும் வரை பெண்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுதல் என மிக கோரமாக தாங்கள் நடத்தப்படுவதாக அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்களை அறியும்போது, எப்படியாவது மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் புறப்படும் அகதிகள், முழுமையாக மறு கரைக்கு வந்து சேரவே முடியாது என்னும் ஒரு நிலை இருப்பதாகவே தோன்றுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்