அழகான இரட்டை குழந்தைகள் பெற்ற மனைவி..ஆனால் DNA சோதனையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வேறு ஆணுக்கு பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் Xiamen மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதில் பெண்ணின் கணவருக்கு ஒரு குழந்தையை பிடிக்கவேயில்லை, அதை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது.

இதனால் அவர் இரண்டு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்த போதும், குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதன் படி Fujian பகுதியில் இருக்கும் Forensic Identification Centre-ல் மேற்கொண்ட டிஎன்ஏ சோதனையில் அதில் ஒரு குழந்தை இவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை இவருக்கு பிறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அப்போது அவரின் மனைவி இல்லை, கணவர் பொய் கூறுகிறார் என்று மறுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரே இரவு மட்டும் கணவருக்கு தெரியாமல் வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் கணவர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இரட்டை குழந்தைகள் எப்படி தனித் தனியாக இன்னொரு நபருக்கு பிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது போன்று குழந்தைகள் பிறக்கும் எனவும் அது 400 தம்பதிகளில் ஒரு தம்பதிக்கோ அல்லது 13,000 தம்பதிகளில் ஒரு தம்பதிக்கோ பிறக்கும் என்று புள்ளி விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers