பிரேக் அப் செய்த காதலி, தீ வைத்து கொளுத்திய காதலன்: காதலியின் வயது?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன்னை காதலித்த பெண் திடீரென பிரேக் அப் செய்ததால் ஆத்திரமுற்ற காதலன் அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

பியூர்ட்டோ பிக்கோவைச் சேர்ந்த அந்த பெண்ணும் வில்சன் (19) என்ற நபரும் காதலித்து வந்திருக்கின்றனர்.

ஒரு நாள் திடீரென தனது காதலை அந்த பெண் முறித்துக் கொள்ள, ஆத்திரமுற்ற வில்சன் அவளது வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த அவள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

அதில் அந்த பெண்ணின் உடல் 90 சதவிகிதம் எரிந்தது. அவளைக் காப்பாற்ற முயன்ற அவளது தாய்க்கும் சகோதரனுக்கும் கூட தீக்காயங்கள் ஏற்பட்டன.

அந்த பெண்ணும் வில்சனும் நண்பர்கள் என்றுதான் தான் நினைத்ததாகவும், அவர்கள் காதலித்தது தனக்கு தெரியாது என்றும் அந்த பெண்ணின் தாய் கூறினார்.

ஆனால் தனது மகன் அந்த பெண்ணுக்காக தனது வீட்டை விட்டே சென்று விட்டதாகவும், அவர்கள் பாலுறவு வைத்துக் கொள்வதும் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் தெரியும் என்றும் கூறும் வில்சனின் தாய் தான் இது குறித்து ஏற்கனவே அவர்களை எச்சரித்துள்ளதாகவும், இந்த குற்றத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தார் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த பெண் உயிருக்கு போராடி வரும் நிலையில், வில்சனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவன் மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பெண்ணின் வயது வெறும் 13தான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்