துர்நாற்றம் வீசும் வாயுவை வெளியிட்டு தொல்லை கொடுத்த அதிகாரி: 12 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பொறியாளர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவில் டேவிட் ஹிங்ஸ்ட் என்ற பொறியாளர் தான் பணியாற்றும் இடத்தில் மேற்பார்வையாளர் வேண்டுமென்றே வாயுவை வெளியிட்டு தொல்லை தருகிறார் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

12 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கடந்த ஆண்டு இவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மேலதிகாரி கிரேக் ஷார்ட் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை என்றும் இதனால் பொறியாளர் கொடுமைக்கு ஆளாகவில்லை என கூறு நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், 56 வயதான நான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டேன், ஒரு நாளைக்கு ஆறுமுறை வாயுவை வெளியேற்றி எனக்கு தொல்லை தருவார் என கூறி இந்த வழக்கை மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது.

அதன்போது, தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை, ஒருவேளை ஒன்றிரண்டு முறை நான் இவ்வாறு செய்திருக்கலாம், அதற்காக டேவிட்டுக்கு தொல்லை தரவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யவில்லை என விளக்கமளித்தார்.

மேலதிகாரி ஷார்ட் அலுவலகத்தை விட்டு தன்னை துரத்த வேண்டுமென்பதற்காகவே இப்படியொரு சதிச் செயலில் ஈடுபட்டார் மேலும் அந்த கட்டுமான நிறுவனத்தில் அப்படியொரு துர்நாற்றம் சூழ வேலை பார்த்ததால் தனக்கு உளவியல் ரீதியிலான மனக் காயங்கள் ஏற்பட்டன என டேவிட் ஹிங்ஸ்ட் தெரிவித்திருந்தார்.

இருதரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி, வெள்ளிக்கிழமையன்று மேல் முறையீடு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers