முதல் பிரசவத்தின் போது துண்டாக வெளியில் வந்த பிஞ்சுக்குழந்தையின் தலை: சடலத்துடன் போராடும் தாய்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை மட்டும் வெளிவந்ததை அடுத்து, உள்ளிருக்கும் பாதி உடலுடன் தாய் ஒருவர் போராடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான கிக்சோ ககாட்லா (19) என்கிற இளம்பெண், தன்னுடைய முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு பிரசவ அறையில் குழந்தையின் தலை மட்டும் வெளியில் வந்துள்ளது. மீத உடல் உள்ளே சிக்கிக்கொண்டு இருக்கிறது. 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருக்கும் சடலத்தை வெளியில் கொண்டு வர அந்த தாய் போராடி வருகிறார்.

இதனால் பல சோதனைகளை அவர் தாங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கிக்சோ, நான் நன்றாக இல்லை. என்னால் சமாளிக்க முடியவில்லை. ஒரு மருத்துவர் வந்தார், நான் அழுத்தி தள்ள வேண்டும் என்றார். நானும் நீண்ட நேரமாக தள்ளி தள்ளிப்பார்த்தேன். ஆனால் ஒன்றும் வரவில்லை. அவர் தனது கைகளை சொருகி பார்த்துவிட்டு, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என கூறினார். ஆனால் இன்னும் எதுவும் வரவில்லை.

குழந்தையின் தலையை அவர் பார்க்க முடிந்தது என்றும் கூறினார். பின்னர் அவர் அந்த பெரிய கரண்டியை எடுக்குமாறு கூறினார்.

என் குழந்தையின் தலை வெளியே வந்தபோது, தலை மட்டும் தான் தனியாக வந்தது. உடல் உள்ளே இருந்துகொண்டது.

என் குழந்தைக்கு என்ன நடந்தது என்கிற உண்மையை அவர்கள் என்னிடம் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு கொடுத்த துயரத்திற்காக, சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

என்னுடைய குழந்தை வளர்ச்சி சரியாக இல்லை என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் குழந்தையின் மீது இருந்த பாசத்தால் நான் தான் கஷ்டங்களை தாண்டி பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். மருத்துவ ஊழியர்களும், குழந்தை நலமாக பிறக்க சிறிது வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தார்கள்.

மருத்துவமனையின் தலைவரான டாக்டர் கில்பர்ட் எனிடியி கூறுகையில், பொதுவாக குழந்தையின் தலை வெளியில் வரும்போது லேசாக குனிந்து நாங்கள் உதவுவோம்.

இந்த குறிப்பிட்ட நிகழ்வில் தலை வந்ததும், உடலும் வெளியில் வரும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் உடல் வரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்