நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் விமானத்தை மோதி உயிரிழந்த விமானி: அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்கா நாட்டில் விமானி ஒருவர் தனது நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் சிறிய ரக விமானத்தை மோதி உயிரிழந்துள்ளார்.

Charl Viljoen என்பவர் Kalahari Air Services - இல் விமானியாக இருக்கிறார். இவரது மனைவி நடாஸா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூள நடந்தது.

அப்போது, அழையா விருந்தாளியாக நடாஸாவின் கணவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை காரணமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துள்ளனர்.

ஆனால், திடீரென நிகழ்ச்சிக்கு வந்த Charl, தனது மனைவியை அடித்துள்ளார், இதனை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சிறிய ரக விமானத்தை வேண்டுமென்று விமானத்தை தாழ்வாக இயக்கி Botswana கிளப்பில் மோதி வெடிக்க செய்துள்ளார்.

இதில் விமானி உயிரிழந்துள்ளார், மனைவி மற்றும் உறவினர்கள் காயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சம்பவம் என இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்