நான் ஒன்றும் ஹீரோ அல்ல: நியூசிலாந்தை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலில் பலரை காப்பாற்றியவரின் நெகிழ்ச்சி பதிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் 50 பேரை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதலில் பலரை காப்பாற்றிய மசூதி இமாம், தாம் ஒன்றும் ஹீரோ அல்ல என தெரிவித்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த இமாம் ரத்தம் தோய்ந்த அங்கியுடன் காணப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் அலபி லட்டீஃப் ஜிருல்லா என்ற அந்த இமாம் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

கிறைஸ்ட்சர்ச் படுகொலை சம்பவம் தம்மை உலுக்கியதாக கூறும் அலபி லட்டீஃப், கொலைகாரனை முதலில் கண்டதும், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என சத்தமிட்டிருக்கிறார்.

உயிர் தப்பியவர்கள் பலரும், தாங்கள் தற்போது உயிருடன் இருக்க காரணமே அலபி லட்டீஃப் தான் என கண்கள் கலங்க நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நைஜீரியாவில் இருந்து நியூசிலாந்துக்கு குடியேறியுள்ள இமாம் அலபி, தாம் தமது கடைமையை மட்டுமே செய்ததாகவும், அதுவே கடவுளின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலானா நியூசிலாந்து மக்களுக்கு தம்மை அந்த ரத்தம் தோய்ந்த அங்கியுடனே அறியப்படுவதாக கூறும் இமாம்,

ஆனால் தாம் அந்த ரத்தக்கறைக்கு நேர் எதிரானவன் எனவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஹீரோ என கருதப்படுபவர்கள், உயிர் நீத்த அந்த 50 பேருமே, தாம் அல்ல என கூறி நெகிழ வைத்துள்ளார்.

ஆனால், சில உயிர்களையாவது காப்பாற்ற தம்மால் முடிந்ததே என்பது கடவுளின் சித்தம் என கூறும் இமாம் அலபி கண்முன்னே 42 உயிர்கள் அவுஸ்திரேலிய பயங்கரவாதியின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானது.

இச்சம்பவத்தில் மொத்தம் 31 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் 11 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்