ஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தின் யுடெர்ட் நகரில் நடந்தேறிய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுடெர்ட் நகரில் டிராம் வண்டியில் புகுந்து நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் துருக்கிய நாட்டவரான 37 வயது Gokmen Tanis என்ற நபரை நீண்ட 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,

சந்தேக நபர்கள் இருவரை இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்துள்ளதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தன்மை, இது தொடர்பில் கைப்பற்றப்பட்டுள்ள கடிதம் உள்ளிட்டவை, இது ஒரு தீவிரவாத நோக்கம் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இச்சம்பவம் அரசியல் காரணிகளால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையா என்பது தொடர்பில் தெளிவான விசாரணை தேவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதாகியுள்ள Tanis என்பவருக்கு சட்ட அமலாக்க முகமையுடன் தொடர்பு உள்ளது எனவும், 2014 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதாகியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி, இந்த மாத துவக்கத்தில் ஒரு சில கொள்ளை சம்பவத்திலும் Tanis ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

மேலும், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை கைதியாக இருந்து மார்ச் மாதம் ஒன்றாம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் Tanis ஆஜராக உள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் 19 வயது இளம்பெண் எனவும், எஞ்சிய இருவர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்