நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு..ஒவ்வொரு உடல்களை தூக்கும் போது? முதல் முறையாக கண்கலங்கி பேசிய ஆம்புலன்ஸ் அதிகாரி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே நுழைந்த போது ஏராளமானோரின் உடல் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததாக ஆம்புலன்ஸின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் Christchurch பகுதியில் இருக்கும் Al Noor மற்றும் Linwood மசூதியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்ற 28 வயது நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், தற்போது வரை 50 பேர் பலியாகியுள்ளனர்.

40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உறவினர்களை இழந்த பலரும் கதறி அழுத சத்தம் இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்தின் காரணமாக அவர்களை மீட்பதற்கு வந்த ஆம்புலன்ஸ்களின் தலைமை அதிகாரி Paul Bennett முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த சம்பவத்தை அவர் விளக்கும் போது தன்னையே அறியாமல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

அவர் கூறுகையில், இந்த சம்பவம் காரணமாக உள்ளே சென்ற போது அங்கு அங்கிருந்த பலரின் உடல் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு ரத்த ஆறு போன்று இருந்தது என்று கண்கலங்கினார்.

அடிபட்டவர்களை காப்பாற்றிவிடலாம் என்று ஸ்ட்ரக்சரில் ஏற்றிய போதே அவர்கள் இறந்துவிட்டதை உணர முடிந்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது 185 பேர் பரிதாபமாக இறந்தனர். அது கூட இயற்கையின் பேரழிவு என்று கூறலாம், ஆனால் இதை எப்படி சொல்வது என்று வேதனையுடன் பேசி முடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்