கல்நெஞ்சிலும் கொஞ்சம் ஈரம் கொண்ட திருடன்… மிச்சமாகிய பெண்ணின் பணம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

சீனாவில், பாவம் உங்கிட்ட வேற காசு இல்லையா என்று பெண்ணிடம் திருடிய பணத்தை திருடன் திருப்பி கொடுத்துவிட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த லி என்ற பெண் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் சென்றார். அவர் பணத்தை எடுத்து முடித்ததும், ஏடிஎம்க்குள் நுழைந்த திருடன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி, லியிடம் இருந்த பணத்தை மொத்தமும் வாங்கி கொண்டான்.

திடீரென்று சித்தனையில் இறங்கிய அவன், லியின் வங்கி கணக்கில் எவ்வளவு மீதித்தொகை இருந்தது என்பதை காண்பிக்க கூறியுள்ளான். அவரும் தனது அக்கவுண்ட் பேலன்சை காட்டினார். லியின் வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை என்பதை பார்த்த திருடன், மனம் மாறி தான் பறித்த பணத்தை லியிடமே மீண்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

இவ்வளவு நியாமான திருடனா என லி ஆச்சரித்திற்குள்ளாகி உள்ளது. ஆனால் ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவன் மீது கத்தியை காட்டி மிரட்டல் உள்ளிட பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்