நியூசிலாந்து சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும்: ஐஎஸ் அமைப்பு சபதம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

தனி ஒரு இஸ்லாமி தேசத்திற்காக தொடர்ந்து போராடி வந்த ஐஸ் தீவிரவாத அமைப்பினர், தங்களது முக்கிய கோட்டையான ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாத காலமாக மௌனம் காத்து வந்த இவர்கள் தற்போது நியூசிலாந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஹாசன் அல்-முஹாஜி 44 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இரண்டு மசூதிகளில் நடந்த படுகொலை முட்டாள்தனமானது, இந்த சம்பவத்தால் இஸ்லாமிய எழுச்சியை எழுப்ப வேண்டும் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் மதத்திற்காக பழிவாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இங்கே சிரியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இறந்து போயுள்ளனர் மற்றும் அவர்களை கொல்வதற்காக குண்டு வீசப்படுகிறது, தற்போது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்