துப்பாக்கிச்சூட்டில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரைவிட்ட ரியல் ஹீரோ பெண்மணி! வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் மற்றவர்களை காப்பாற்ற பெண்ணொருவர் தனது உயிரைவிட்ட சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் தான் லிண்டா ஆர்ம்ஸ்டார்ங் (65) என்ற பெண்.

பொதுவாகவே இளகிய மனம் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்ட லிண்டா, துப்பாக்கிச்சூட்டின் போது மசூதியில் இருந்த நபர்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரை விட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இது குறித்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த லடீப் அலாபி கூறுகையில், துப்பாக்கிச்சூட்டின் போது பெண்கள் பதட்டத்தில் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தார்கள்.

அப்போது சில பெண்களை காப்பாற்றும் நோக்கில் துப்பாக்கி குண்டு வந்த திசைக்கு முன்னால் வேண்டுமென்றே லிண்டா போய் நின்று தனது உயிரை தியாகம் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த மசூதியின் செயலாளர் எட்வர்ட் வர்ட்ஸ்வெர்த் கூறுகையில், இந்த மசூதிக்கு கடந்த இரண்டாண்டுகளாக தான் லிண்டா வந்து கொண்டிருந்தார்.

அவர் யார் என்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்வார், இயற்கையிலேயே அவரின் இயல்பு இதுதான் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்