பல்வேறு கனவுகளுடன் மண வாழ்க்கையை தொடங்கிய இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் கடுமையான புயல் மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் இதில் சிக்கி புதுமணத்தம்பதி உயிரிழந்துள்ளனர்.

ஜிம்பாப்வேயின் Manicaland மாகாணத்தில் கடுமையான புயல் மற்றும் மழை பெய்து வருகிறது.

இப்புயலுக்கு Idai என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மற்றும் வெள்ளத்தில் Manicaland மாகாணத்தை சேர்ந்த 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்கு புதுமணத்தம்பதி பலியாகியுள்ளனர்.

பல்வேறு கனவுகளோடு தங்கள் மண வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கிய இந்த தம்பதியின் மரணம் அவர்களின் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்