வெளிநாட்டில் இருந்து வந்து பெற்றெடுத்த தாயை தேடும் தங்கமகன்: 20 வருட பாசப்போராட்டம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

20 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து வெள்ளைக்கார தம்பதியினரால் தத்தெடுத்து நெதர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தற்போது தனது தாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சென்னை திருவேற்காடு ஸ்ரீ சண்முகா நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து லக்‌ஷ்மன் என்ற 4 வயது ஆண் குழந்தையை நெதர்லாந்தை சேர்ந் ஜூர்ரி டிரென்ட்-வில்மா டி நெய்ட் தம்பதி தத்தெடுத்து சென்றனர்.

கடந்த 20 வருடங்களாக நெதர்லாந்தில் வசித்து வரும் லக்‌ஷ்மனுக்கு தன்னை பெற்றெடுத்த தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இதனால் தனது தம்பியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த லக்‌ஷ்மன் சென்னையில் பல பகுதிகளுக்கு சென்று லக்‌ஷ்மனின் பெற்றோரை தேடி வருகின்றார்.

எனது தாயின் பெயர் லோகம்மாள் என்பது மட்டும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. என்னை பெற்றெடுத்த தாயை பார்ப்பதற்கு எனது வளர்ப்பு பெற்றோர் உதவி செய்கிறார்கள்.

எனது வாழ்வில் ஒருமுறையாவது தாயை பார்த்துவிட்டால் சந்தோஷமாக நெதர்லாந்துக்கு சென்றுவிடுவேன், அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என கூறுகிறார் லக்‌ஷ்மன்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்