நான் அவனை வெறுக்கவில்லை, அவன் ஒரு மனிதன்! துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் கணவர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது கணவரை காப்பாற்ற மசூதிக்குள் ஓடிய ஒரு பெண்ணை,அவுஸ்திரேலிய தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிலையிலும், அவனை நான் வெறுக்கவில்லை என்று கூறியுள்ளார் அந்த பெண்ணின் கணவர்.

பிரெண்டன் என்னும் அந்த தீவிரவாதி அல் நூர் மசூதியில் வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருக்கும்போது, Husna Ahmed (44) என்ற பெண், மசூதியின் பக்க வாசல் வழியாக பலரை வெளியே அழைத்துக் கொண்டு வந்து காப்பாற்றியிருக்கிறார்.

பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்துபோன தன கணவர் Farid Ahmedஐக் காப்பாற்றுவதற்காக அவர் மீண்டும் மசூதிக்குள் நுழைந்தபோது, பின்னாலிருந்து தீவிரவாதி அவரை சுட, உடனே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார் Husna.

அதற்குள் தனது சக்கர நாற்காலியை கைகளால் தள்ளிக் கொண்டே வெளியே வந்து விட்ட Farid, தனது காரின் பின்னால் மறைந்து கொண்டிருக்கிறார்.

பின்னர் அந்த தீவிரவாதி அங்கிருந்து சென்றுவிட, உள்ளே சென்று யாரையாவது காப்பாற்ற முடியுமா என Farid பார்க்கும்போது, பொலிசார் வந்திருக்கிறார்கள்.

அவரை வெளியே அழைத்துக் கொண்டு வந்த பொலிசார், அவரது மனைவி இறந்து போன செய்தியை அவருக்கு சொல்லியிருக்கிறார்கள்.

தனது மனைவியை சுட்டுக் கொன்றவனைக் குறித்து Faridஇடம் கேட்டால், அந்த நபர் ஒரு மனிதன், அதனால் அவரை நான் நேசிக்கிறேன், அவன் சிறு வயதில் ஒருவேளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எனவே அவனும் என் சகோதரன், நான் அவனை மன்னித்துவிட்டேன், என் மனைவி உயிரோடிருந்தாலும் இதைத்தான் கூறியிருப்பாள் என்று மனமுருகக் கூறுகிறார் Farid.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்