நெதர்லாந்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! நான் தப்பு செய்யவில்லை என கத்திய பெண்... தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தின் Utrecht நகரில் உள்ள டிராம் வாகனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலரும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி காலை 10.45 மணிக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிசார் மற்றும், தீவிரவாத எதிர்ப்பு பொலிசார் விரைந்துள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்கள்.

டிராமில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அந்த வாகனாமனது இணைப்பின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனத்தை சுற்றி அவசர சேவை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஜிம்மி டீ கோஸ்டர் என்பவர் கூறுகையில், நான்கு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சுடுவதை பார்த்தேன், அப்போது அந்த பெண், நான் எந்த தவறும் செய்யவில்லை என கத்தினார்.

இது நடக்கும் போதும் என் வேலையில் இருந்து நான் வெளியில் வந்தேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20லிருந்து 35 வயதுவரை இருக்கலாம்.

முதலில் அப்பெண்ணை இழுத்து செல்ல நால்வரும் முயன்றார்கள், பின்னர் அந்த பெண்ணை போக விட்டுவிட்டார்கள் என கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஜோஸ்ட் கூறியுள்ளார்.

மேலும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்