திருமணத்தில் கலந்து கொள்ள நினைத்தேன், ஆனால் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறேன்... இளம்பெண்ணின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் பெண் தூக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்து அப்பெண்ணின் தோழி வேதனை தெரிவித்துள்ளார்.

Benue மாகாணத்தை சேர்ந்தவர் அடீ நிகுபன். இளம் பெண்ணான இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் நிகுபன் சமீபத்தில் வீட்டில் இரவு தூங்க சென்றார், ஆனால் காலையில் அவர் கண்விழிக்காமலேயே உயிரிழந்தார்.

நிகுபனின் மரணம் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரின் நெருங்கிய தோழியான ஜெனீபரை அதிகம் பாதித்துள்ளது.

நிகுபன் குறித்து ஜெனீபர் சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், என் தோழி நிகுபன் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டேன், ஆனால் தற்போது அவள் இறுதிச்சடங்குக்கு செல்ல போகிறேன்.

உன் பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டாய், நாம் ஒன்றாக சிரித்தோம், ஒன்றாக இருந்தோம், நீ என் தோழி மற்றும் சகோதரி. உன் ஆத்மா சாந்தியடையட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்