நியூசிலாந்து துப்பாக்கிசூடு சம்பவத்தை பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பிய வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தில் உள்ள இரு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை பேஸ்புக்கில் நேரலை செய்த வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டே தீவிரவாதி Tarrant, தனது தலையில் பொருத்தப்பட்டிருந்த கமெராவின் மூலம் பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளான்.

பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில் இந்த வீடியோக்கள் வைரலாகின. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து முடிந்த சில நிமிடங்களில் இந்த வீடியோக்கள் பேஸ்புக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன.

இந்த நேரலை வீடியோவால் அதிக பயனர்கள் குவிந்த பேஸ்புக்கில், இது நிறுத்தப்பட்ட பிறகு ஒரு நாளில் மட்டும் 1.5 மில்லியன் பயனர்கள் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 18 வயது வாலிபர் இந்த தீவிரவாத சம்பவத்தை ஒளிபரப்பிய குற்றத்திற்காக உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரின் பெயர் மற்றும் விவரங்கள் தனிப்பட்ட காரணம் கருதி வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஏப்ரல் மாதம் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பேஸ்புக்கில் நேரலை செய்தது குறித்து அதன் தலைமை அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்