157 பேருடன் நொறுங்கிய விமானம்..காலியான சவப்பெட்டிகளுடன் நடந்த ஊர்வலம்! கண்கலங்க வைத்த புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் இறந்தவர்களின் உடல் அடையாளம் காணப்படாததால், காலியான சவப்பெட்டியில் இறந்தவர்களின் புகைப்படங்கள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10-ஆம் திகதி விபத்தில் சிக்கியதால், இதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதில் விமான கிழே விழுந்து நொறுங்கியதால், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. இதனால் உறவினர்கள் இறந்த தங்கள் சொந்தங்களின் முகங்களைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானம் விபத்தில் சிக்கியதால், இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எத்தியோப்பியாவின் Holy Trinity Cathedral பகுதியில் இறந்தவர்களின் பெயர்களில் சவப்பெட்டி வைக்கப்படு, அதில் அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது அங்கு கூடிய உறவினர்கள் உட்பட பலரும் கருப்பு நிறத்தில் ஆன உடையையே அணிந்து வந்ததாகவும், இதில் 17 பேரின் காலியான சவப் பெட்டிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்த சவப் பெட்டிகளை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறும் புகைப்படங்கள் வெளியாகி பார்போரை கண்கலங்க வைக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்